×

திறந்தே கிடக்கிறது அரசு தொடக்கப்பள்ளிக்கு ஒரு பூட்டு கூட இல்லை பொருட்கள் திருடுபோகும் அபாயம்

ராமநாதபுரம், மே 25: ராமநாதபுரம் அருகே அரசுப்பள்ளிக்கு பூட்டு கூட இல்லாமல் திறந்துகிடக்கிறது. இதனால் பொருட்கள் திருடுபோகும் அபாய நிலை நிலவுகிறது. ராமநாதபுரம் அருகே களிமண்குண்டு  கிராமத்தில்  அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளியில் விடுமுறைக்கு சென்ற ஆசிரியர்கள் பள்ளியின் கதவை முறையாக பூட்டாமல் கடமைக்காக   பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கதவில்  கொண்டி இல்லாததால் தற்போது மாணவர்கள் பயிலும் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை அனைத்தும் திறந்தே கிடக்கிறது. இதன் அருகிலுள்ள மற்றொரு தொடக்கப்பள்ளி கட்டடத்தில் அப்பகுதி இளைஞர்கள்  சுவர்களில் ஏறி குதித்து சரக்கு அடிப்பது போன்ற செயல்களி–்ல ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மாணவர்கள் உபயோகிக்கும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள்  திருடு போகும் அபாயம் உள்ளது. தொடக்கப்பள்ளியில் உள்ள கழிப்பறை மாணவர்கள் உபயோகபடுத்த முடியாத அளவில் சேதமடைந்துள்ளது. பள்ளிக்கு அருகிலுள்ள புயல்காப்பகம் பராமரிப்பில்லாமல் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பள்ளிக்கு பூட்டு போடாமல் விட்டுசென்றவர்கள் மீது பள்ளி கல்வித்துறை  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : government ,primary school ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...