×

பரமக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு

பரமக்குடி, மே 25: பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகருக்கு மாவட்ட அதிமுக மற்றும் மாநில மகளிரணி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் 14,032 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து வாக்கு எண்ணிகை நடைபெற்ற இடத்திற்கு வந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சதன்பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்தார். நேற்று காலை ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு வருகை தந்த சதன்பிரபாகருக்கு கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநில மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமையிலான மகளிரணியினர் சதன் பிரபாகருக்கு ஆரத்தி எடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர். பரமக்குடி பேருந்து நிலையத்தில் நகர் அம்மா பேரவை சார்பாக நகர் செயலாளர் வடமலையான் தலைமையில் பட்டாசு வெடித்து வரவேற்பு வழங்கபட்டது. இதில் நகர் செயலாளர் கணேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்மாலிக், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், பரமக்குடி நகர் கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல் முருகன், ஒன்றிய செயலாளர்கள் நாகநாதன், முத்தையா, குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : candidate ,AIADMK ,constituency ,Paramakudi ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...