×

சிவகங்கை தொகுதியை மீண்டும் கைப்பற்றிய காங்கிரஸ்

சிவகங்கை, மே 25: சிவகங்கை மக்களவை தொகுதியை ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. சிவகங்கை மக்களவை கடந்த 1980ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வி.சுவாமிநாதன் முதன்முறையாக வெற்றிபெற்றார். தொடர்ந்து 1984-96வரை காங்கிரஸ் சார்பிலும், 1996&99வரை த.மா.கா சார்பிலும் தொடர்ச்சியாக ஐந்து தேர்தல்களில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். 1999ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சன நாச்சியப்பன் வெற்றிபெற்றார். 2004மற்றும் 2009தேர்தல்களில் மீண்டும் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். சிவகங்கை தொகுதியில் ஏற்கனவே நடந்த 13தேர்தல்களில் இரண்டு முறை திமுக, இரண்டு முறை அதிமுகவும் வெற்றி பெற்றன. மற்ற அனைத்து தேர்தல்களிலும் 7முறை காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸில் இருந்து பிரிந்து சில வருடம் இருந்த த.மா.கா இரு முறையும் வெற்றி பெற்றன. 1980ல் தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி(தமாகா உட்பட) 2014வரை தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை மக்களவை தொகுதியில் 37ஆண்டிற்கு பிறகு அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சி சிவகங்கை தொகுதியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,constituency ,Sivagangai ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்