×

கார்த்தி சிதம்பரம் முதல் முறை எம்.பி

சிவகங்கை, மே 25: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திசிதம்பரம் முதல் முறை எம்பியாகியுள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திசிதம்பரம், பிஜேபி வேட்பாளராக எச்.ராஜா, அமமுக வேட்பாளராக தேர்போகிபாண்டி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக கவிஞர் சிநேகன் உட்பட 26பேர் போட்டியிட்டனர். இதில் எச்.ராஜா மூன்றாவது முறையாக எம்.பிக்கு போட்டியிட்டு மூன்று முறையும் தோல்வியடைந்துள்ளார். கார்த்திசிதம்பரம் இரண்டாவது முறையாக போட்டியிட்ட நிலையில் இம்முறை வெற்றி பெற்றார். இவர் முதல் முறையாக எம்பியாகியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு சிவகங்கை தொகுதி எம்.பியான பிஆர். செந்தில்நாதனும் முதல் முறையாக எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

Tags : Karthi Chidambaram ,
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...