×

தீ விபத்தில் லேப்டாப் ஜெராக்ஸ் இயந்திரம் சேதம்

நெல்லை, மே 25: கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூரில் அங்கன்வாடி அருகே ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் கூரையால் டியூஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி படித்த இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் திடீரென அங்குள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு மற்றும் கூரை தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள் குடங்களில் தண்ணீரை பிடித்து தீயை மேலும் பரவவிடாமல் அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் புத்தகங்கள், பீரோ, டேபிள், சேர்கள், லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. இது குறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Xerox ,fire crash ,
× RELATED அக்கரையில் உள்ள பல கோடி மதிப்புள்ள...