சேர்ந்தமரம் பகுதியில் திடீர் மழை

புளியங்குடி,மே 25:  நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் 98 டிகிரி முதல் 103 டிகிரி வரை கொளுத்தி வாங்குகிறது. இதனால் நண்பகல் 12மணி முதல் மாலை 4மணி வரை அனல் காற்று வீசுகிறது.  மக்கள் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில் சேர்ந்தமரம் மற்றும் தன்னூத்து, சுப்பையாபுரம், வெள்ளாளங்குளம், வீரசிகாமணி, வேலப்பநாடானூர் உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்றுமுன் தினம் மாலை 5மணி முதல் 6மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுரண்டை-சங்கரன்கோவில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் குறைந்த நிலையில் பொதுமக்களும்,விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்த னர்.

 இந்நிலையில் கனமழையால் சேர்ந்தமரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் போலீஸ் நிலையம் முன்பு தண்ணீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால் அப் பகுதி குட்டைபோல் காட்சியளிக்கிறது. இம்மழைநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி மற் றும் தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சேந்தமரம் பஞ்சாயத்து நிர்வாகம் தேங்கியமழை மற்றும் கழிவு நீரை வழிந்தோட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: