×

கடையம் அருகே கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலை

கடையம்,மே 25:  கடையம் அருகே கனரக வாகனங்களால் சாலை சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கபட்டு வருகின்றனர். கடையத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் தெற்கு மடத்தூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து காவூர், பொட்டல்புதூர் செல்லும் விலக்கு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கல்குவாரிகள் அதிகம் உள்ளன. இதனால் இந்த வழியாக குவாரி லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றன. இதில் பெரிய ராட்சத லாரிகளில் அரசு வரையறுக்கபட்ட அளவை விட அதிகமாக கல், மணல் ஏற்றி கொண்டு செல்கின்றனர். இதனால் பாரம் தாங்கமுடியாமல் சாலை பெயர்ந்து வருகிறது. விலக்கு பகுதியில் உள்ள தார் முழுவதும் பெயர்ந்து வருகிறது. இதில் உள்ள ஜல்லிகள் சாலை முழுவதும் பரவி கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையை கடையம், ஆலங்குளம், கேளையாபிள்ளையூர், காவூர், சங்கரலிங்கபுரம், பொட்டல்புதூர், வள்ளியம்மாள்புரம் உள்பட பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது காவூர் அருகில் மதுக்கடை திறக்கபட்டுள்ளது. இங்கு வரும் மதுப்பிரியர்கள் இந்த விலக்கு பகுதியில் விழுந்து வருகின்றனர். பொதுமக்களும் நடக்க கூட முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.

அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் இந்த விலக்கு பகுதியில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களை அப்புறபடுத்தி சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,yard ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...