நெல்லை எம்பி ஞானதிரவியம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து

பணகுடி,மே 25:  நெல்லை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானதிரவியம் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அப்போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தினார். தொடர்ந்து  மாநில மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்பியான கனிமொழியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில வர்த்தக அணி செயலாளர் கிரகாம்பெல், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, எம்எல்ஏக்கள் மைதீன்கான், லட்சுமணன், நெல்லை மாவட்ட மீனவரணி செயலாளர் எரிக்ஜுட் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: