×

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 161 வழக்குகள் பதிவு

விழுப்புரம், மே 25:  நடந்து முடிந்த மக்களவை தேர்தலையொட்டி மார்ச் 10ம் தேதி முதல் வரும் 27ம் தேதிவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சுவர் விளம்பரம் எழுதியது, விதிகளை மீறி கூட்டம் நடத்தியது, தகுந்த ஆதாரங்களின்றி ரொக்கப்பணம், வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு சென்றது என தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் வழக்குகள் பதிவு செய்தனர்.  விழுப்புரத்தில் 34, திண்டிவனத்தில் 27, செஞ்சியில் 30, திருக்கோவிலூரில் 20, கோட்டக்குப்பத்தில் 17, கள்ளக்குறிச்சியில் 11, உளுந்தூர்பேட்டையில் 22 என மொத்தம் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளுக்கு சம்மந்தப்பட்ட காவல்துறையினர் வரும் 27ம் தேதி குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்து மாவட்ட காவல் அலுவலகத்தில் அளிப்பர். இப்பட்டியலை மாவட்ட காவல்துறை, மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அளித்து, அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது என காவல்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.

Tags : Villupuram district ,
× RELATED நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன்...