×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனுக்கு சீல்வைப்பு

விழுப்புரம், மே 25:  விழுப்புரம் மக்களவை தொகுதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. விழுப்புரம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடந்தது. இதில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 1,28,068 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் நேற்று கல்லூரியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு குடோனில் வைக்கப்பட்டது.  லாரிகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த இயந்திரங்கள் காட்பாடி ரயில்வே கேட் அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்கள் குடோனில் வைக்கப்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை