வீடு புகுந்து மாமூல் கேட்டு 5 பேர் கும்பல் மிரட்டல்

புதுச்சேரி,  மே 25: புதுவை, தட்டாஞ்சாவடியில் வீடு புகுந்து மாமூல் கேட்டு மிரட்டிய  ரவுடிகளை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுவை, தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் முருகன் (48). கட்டிட  காண்டிராக்டரான இவர், நவசக்தி நகர், பழைய சாராயக்கடை அருகே புதிய வீடு  கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று அங்கு ஆட்டோவில் வந்த 5  பேர் கும்பல், அத்துமீறி உள்ளே நுழைந்து மாமூல் கேட்டு துணிகரமாக மிரட்டல்  விடுத்துச் சென்றது. இதுபற்றி கோரிமேடு காவல் நிலையத்தில் முருகன்  முறையிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார்  அத்துமீறி நுழைதல் (447), மாமூல் கேட்டல் (385), கொலை மிரட்டல் விடுத்தல்  (506/2) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டு ஆட்டோ ஓட்டுனரை  பிடித்து விசாரித்தனர். அதில் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில்  கோாிமேடு, மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்  ஜாமீனில் வெளியே வந்துள்ள ரவுடிகள் யார், யார்? என்பது குறித்த பட்டியலை  சேகரித்துள்ள போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர். மேலும் சில ரவுடிகளின் நடமாட்டத்தை  சந்தேகத்தின்பேரில் மப்டி உடைகளில் தனிப்படை கண்காணித்து வருகிறது. இதனால்  விரைவில் இவ்வழக்கில் குற்றவாளிகள் சிக்குவர் என்று தெரிகிறது.

Advertising
Advertising

Related Stories: