30ல் ஒன்றில் மட்டும் என்ஆர் காங். முன்னிலை

புதுச்சேரி,  மே 25:  புதுச்சேரியில் பிரதான எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் அதிமுக,  பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுக்கு 7 எம்எல்ஏக்களும், அதிமுகவுக்கு 4  எம்எல்ஏக்கள் என 11 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால் நடந்து  முடிந்த தேர்தலில் 30 தொகுதிகளில் ஒன்றில் (இந்திரா நகர்) மட்டுமே என்.ஆர்.  காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதில் 28 ஆயிரத்து 380 வாக்குகள்  பதிவாகியிருந்தது. இதில் என்.ஆர் காங்கிரஸ் 13 ஆயிரத்து 361 வாக்குகளும்,  காங்கிரஸ் 11 ஆயிரத்து 887 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதன்படி என்.ஆர்  காங்கிரஸ் 1,474 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. அதேபோல் அனைத்து  தொகுதிகளில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கிய  காங்கிரசுக்கு முதலியார்பேட்டை தொகுதியில் மட்டுமே என்ஆர் காங்கிரசால்  கடும் போட்டி அளிக்கப்பட்டு இருந்தது. அங்கு காங்கிரசால் 342 வாக்குகள்  மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.

Advertising
Advertising

மற்றபடி காங்கிரஸ் கட்சிக்கு  அதிகபட்சமாக காரைக்கால் தெற்கு தொகுதியில் 13,742 ஓட்டுகள் கிடைத்தது. அடுத்தபடியாக வில்லியனூரில் 13,391 வாக்குகளும், நெல்லித்தோப்பு  13,146, ஏனாம் தொகுதி 12,678, உழவர்கரை 12,447 ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ்  கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது.

Related Stories: