தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய மாஜி ராணுவ வீரர்

பாகூர், மே 25: பாகூர் அடுத்த குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (60). இவரது மகள் சீத்தாலட்சுமி (32). இவரை அதே ஊரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தானு என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த தானு அங்கிருந்த கத்தியை எடுத்து சீத்தாலட்சுமியின் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுபற்றி அவரது தந்தை ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய முன்னாள் ராணுவ வீரர் தானுவை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: