கம்பெனி மீது இரும்பு பைப் வீசியவர் மீது வழக்குபதிவு

பாகூர், மே 25: கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் பின்புற பகுதியில் சிமெண்ட் பூசுவதற்காக பக்கத்தில் உள்ள கண்ணாடி தயாரிக்கும் கம்பெனி வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விஜயகுமார், கண்ணாடி கம்பெனி தலைமை செயல் அதிகாரி சரத்பாபு என்பவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவர் மின்சார உபகரணங்கள் இருப்பதால் அனுமதி மறுத்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த விஜயகுமார் தனது வீட்டின் மாடியில் இருந்த ஒரு இரும்பு பைப்பை, கண்ணாடி கம்பெனியில் இருந்த மின்சார ஒயரின் மீது தூக்கி போட்டுள்ளார். இதனால், மின்சார கோளாறு ஏற்பட்டு இயந்திரங்கள் பழுதானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை செயல் அதிகாரி சரத்பாபு கொடுத்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: