×

நுண்கலை பாடப்பிரிவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி, மே 25:  அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் உள்ள நுண்கலை பாடப்பிரிவுகளுக்கு இன்று (25ம் தேதி) முதல் ஜூன் 4ம் தேதி வரை சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியில் 2019-20ம் கல்வி ஆண்டு பொறியியல் - 3,777, உயிரியல் பாடப்பிரிவு - 827,  கலை மற்றும் அறிவியல் - 4,923, டிப்ளமோ இடங்கள் - 188, லேட்ரல் என்ட்ரி இடங்கள் - 648 என மொத்தம் 9715 இடங்கள் சென்டாக் தரவரிசை அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 15ம் தேதி துவங்கியது. மாணவ, மாணவிகள் சென்டாக் உதவி மையங்கள் மூலமாகவும், தனியார் ப்ரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் உள்ள நுண்கலை பாடப்பிரிவுகளுக்கு இன்று (25ம் தேதி) முதல் வருகிற ஜூன் 4ம் தேதி வரை ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு https://centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை சென்டாக் கன்வீனர் மாணிக் தீபன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது