2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் 3வது இடைத்தேர்தல்.

புதுச்சேரி, மே 25:  புதுவையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காமராஜர்நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சபாநாயகர் பதவி வகித்தவர் வைத்திலிங்கம். அவர், சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெற்றதன் மூலம், காமராஜர்நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இதனால் அந்த தொகுதி காலியிடமாக அறிவிக்கப்படும். அதன்பின், 6 மாதத்திற்குள் காமராஜர்நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலுக்குப்பிறகு நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ள நிலையில், தற்போது 3வதாக காமராஜர்நகர் தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுடன் சேர்த்து காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: