திருநள்ளாறு கோயில் பிரமோற்சவம் 29ம் தேதி கொடியேற்றம்

காரைக்கால், மே 25: காரைக்கால் திருநள்ளாற்றில் உள்ள தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில், உலக புகழ்மிக்க சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்வது வழக்கம். இக்கோயிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரமோற்சவ விழாவின் தொடக்கமாக, கடந்த 2ம் தேதி பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்த நிகழ்வாக வரும் 29ம் தேதி பிரமோற்சவ கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 12ம் தேதி தேரோட்டமும், 13ம் தேதி சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: