தொழிற்கூட உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

வில்லியனூர், மே 25: வில்லியனூர் அருகே தொழிற்கூட உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்துரு (22). இவர் கோர்க்காடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து வாகன உதிரி பாகங்களை பெற்று அதற்கு நிக்கல் முலாம் பூசும் ஜாப்ஒர்க் பணி செய்து வந்தார். இதற்காக வில்லியனூர் அருகே உள்ள பொறையூரில் சிறுதொழில் கூடம் நடத்தி வரும் இவர், வடமங்கலம் பகுதியில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர் சபரி, ஜெயசந்துரு வசிக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார். வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் ஜெயசந்துரு தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சபரி, வில்லியனூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஏட்டு கிருபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயசந்துரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து ஜெயசந்துரு காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தொழில் நஷ்டம் காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: