அகில இந்திய ஹாக்கி போட்டி இன்று அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூரு-சென்னை ஐசிஎப்; மும்பை-செகந்திராபாத் பலப்பரீட்சை

கோவில்பட்டி, மே 25: கோவில்பட்டியில் நடந்து வரும் லட்சுமியம்மாள் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியின் 4வது காலியிறுதி போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியினர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். கோவில்பட்டியில் லட்சுமியம்மாள் கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள், கடந்த 16ம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் 4வது காலியுறுதி போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியுடன் மும்பை யூனியன் வங்கி அணியினர் மோதினர். இதில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியினர் 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இன்று (25ம் தேதி) அரையிறுதி போட்டிகள் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் அரையிறுதியில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணியுடன் சென்னை ஐசிஎப் ஹாக்கி அணியும், இரவு 7.15 மணிக்கு நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் ஆல் இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி மும்பை அணியுடன் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதுகிறது. இப்போட்டிகளில் முதலிடம் பெறும் 2 அணிகள் நாளை (26ம் தேதி) நடக்கும்  இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertising
Advertising

Related Stories: