குளத்தூர் அருகே மேல்மாந்தையில் தெருக்களில் தேங்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்

குளத்தூர், மே 25:  குளத்தூர் அருகே மேல்மாந்தை கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. குளத்தூரை அடுத்த கிழக்கு கடற்கரைசாலையோர கிராமமான மேல்மாந்தை கிராமத்தில் முக்கிய தெருவீதிகளில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவீதிகளில் ஆறாக ஓடுவதுடன் வெளியே செல்ல வழியில்லாமல் அப்படியே நடுப்பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் காணப்படுகிறது. மேலும் மேல்மாந்தை நடுத்தெரு பகுதியில் பெரிய பள்ளங்களில் கழிவுநீர் தேங்குவதுடன் அவ்வழியே செல்வோர் கழிவுநீரில் மிதித்துதான் அறுவெறுப்புடன் செல்ல வேண்டியுள்ளது. பல மாதங்களாக கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகரித்து இருக்கிறது. எனவே டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் முன்பு சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தெருவீதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற புதியதாக கால்வாய் அமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: