வீரபாண்டிய கட்டபொம்மனின் மெய்காப்பு படை தளபதிகளுக்கு மரியாதை

ஓட்டப்பிடாரம், மே 25: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் மெய்காப்பு படை தளபதிகளான பொட்டி பகடை, முத்தன் பகடை மற்றும் கந்தன் பகடையின் 219ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போரின்போது கட்டபொம்மனுக்கு துணையாகவும், மெய்காப்பு படை தளபதிகளாகவும் இருந்தவர்கள் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை ஆவர். இம்மூவரின் 219வது நினைவு தினம், நேற்று குறுக்குச்சாலையை அடுத்துள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 3 பேரின் படத்திற்கும் ஆதிதமிழர் கட்சி மாநில அமைப்பு செயலர் திலீபன், துணை பொதுச்செயலாளர் கண்ணன், திராவிட தமிழர் கட்சி நிர்வாகி கதிரவன், புரட்சி புலிகள் அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் தமிழ் அகிலன்,  ஆதிதமிழர் பேரவை மாவட்ட மகளிரணி செயலாளர் ஷேமா மற்றும் அப்பகுதியை சேர்ந்த நிரவாகிகள், பெண்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Advertising
Advertising

Related Stories: