நாமக்கல் முட்டை விலை

3 காசு உயர்வுசேலம், மே 24: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 3 காசு உயர்ந்துள்ளது. இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 403 காசுகளாக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை பரிந்துரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்இசிசி)  நேற்று முட்டை விலையில் மேலும் 3 காசுகள் உயர்த்தி 403 காசாக நிர்ணயம் செய்தது. ஆனால், கோழிப்பண்ணையாளர்கள், பண்ணைகளில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 355 காசாக நீடிக்கிறது என அறிவித்துள்ளனர். ஒரு கிலோ முட்டைக்கோழி ₹84 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ₹98 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: