×

ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி

ஓசூர், மே 24: ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்ற நிலையில், இறுதி நிலவரம் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதலே விறு விறுப்பாக நடைபெற்றது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி முன்னிலை வகித்து வந்தார்.

211 தபால் வாக்கினை தொடர்ந்து முதல் சுற்றில் 3771 வாக்குகள் பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் சத்யாவுக்கு 3698 வாக்குகள் கிடைத்தது. 2வது சுற்றில் சத்யா 4344 வாக்குகள் பெற்ற நிலையில், ஜோதி 5713 வாக்குகள் பெற்றார். 3வது சுற்றில் அவர் 4473 வாக்குகள் பெற்றபோது, சத்யாவுக்கு 3404 வாக்குகள் கிடைத்தது. 4வது சுற்றில் சத்யா 3570, ஜோதி 3646 பெற்றனர். 5வது சுற்றில் நிலைமை மாறியது. சத்யா 3687 வாக்குகள் பெற்ற நிலையில், ஜோதி 3240 வாக்குகளே பெற்று பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து, வந்த சுற்றுக்களில் சத்யாவிற்கு(திமுக) ஏறுமுகமாகவே இருந்தது.
அதன் விவரம் வருமாறு:
6வது சுற்று-சத்யா 4014, ஜோதி 4632; 7வது சுற்று-சத்யா 5285, ஜோதி 3581; 8வது சுற்று-சத்யா 3867, ஜோதி 3878; 9வது சுற்று-சத்யா 4759, ஜோதி 2976; 10வது சுற்று-சத்யா 5024, ஜோதி 2608; 11வது சுற்று-சத்யா 4482, ஜோதி 2886, 12வது சுற்று-சத்யா 4518, ஜோதி 2360; 13வது சுற்று-சத்யா 5010, ஜோதி 2856; 14வது சுற்று-சத்யா 4475, ஜோதி 2851; 15வது சுற்று-சத்யா 4206, ஜோதி 2086.

16வது சுற்று-சத்யா 4114, ஜோதி 2439; 17வது சுற்று-சத்யா 3957, ஜோதி 2801; 18வது சுற்று-சத்யா 5131, ஜோதி 2812; 19வது சுற்று-சத்யா 4184, ஜோதி 2606; 20வது சுற்று-சத்யா 3813, ஜோதி 3216; 21வது சுற்று-சத்யா 4089, ஜோதி 4198; 22வது சுற்று-சத்யா 4495, ஜோதி 3224; 23வது சுற்று-சத்யா 4258, ஜோதி 4043, 24வது சுற்று-சத்யா 4592, ஜோதி 3856, 25வது சுற்று-சத்யா 4769, ஜோதி 4289. 25வது சுற்று முடிவின்படி திமுக வேட்பாளர் சத்யா 23,338 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

கடைசி முறையான 26வது சுற்று அறிவிப்பில் கடும் இழுபறி காணப்பட்டது. எம்.பி., தொகுதிக்கான வாக்குப்பெட்டி எம்எல்ஏ தொகுதிக்கு வந்து விட்டதாக முன்னுக்கு பின் முரணான தகவல் வெளியானது. இதனால், இறுதிச்சுற்றி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் ஓசூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியை விட, 23213 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றிபெற்றார்.

அவர் பெற்ற மாத்த வாக்குகள்- 115027, ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி 91814 வாக்குகளும், புகழேந்தி(அமமுக) 1432 வாக்குகளும், ஜெயபால்(மக்கள் நீதி மய்யம்) 8032 வாக்குகளும், ராஜசேகர்(நாம் தமிழர் கட்சி) 6740 வாக்குகளும் பெற்றிருந்தனர். நோட்டாவுக்கு 4262 வாக்குகள் கிடைத்திருந்தது. தொகுதியில் மொத்த வாக்குகள்- 327294, பதிவான வாக்குகள் - 227570 ஆகும்.

Tags : Haryana ,
× RELATED ஹரியானாவில் இருந்து பாஜக கொடி, தாமரை...