×

தபால் வாக்கு அறிவிப்பில் தாமதம் நிருபர்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி, மே 24:  தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, நேற்று காலை 8.15 மணியளவில் தொடங்கியது. முதல் சுற்றுக்கு முன்பாகவே, தபால் வாக்கு பற்றிய விவரத்தை அறிவிக்க வேண்டும்.
ஆனால், நேற்றிரவு 10 மணியாகியும், தபால் வாக்கு பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, தபால் ஓட்டுக்கள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கடைசி நேரத்தில் தான் அதுகுறித்து அறிவிக்க முடியும் என தெரிவித்து விட்டனர்.  முன்னதாக, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல் சுற்றுக்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் நீண்டநேரமாக அறிவிக்கவில்லை.
இதனால் அங்கிருந்த நிருபர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மீடியா சென்டரில் இருந்து வெளியேறிய நிருபர்கள், திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஓசூர்-சானமாவு வனப்பகுதியில்
பல பிரிவுகளாக பிரிந்து யானைக்கூட்டம் முகாம்
ஓசூர், மே 24: ஓசூர்-சானமாவு வனப்பகுதியில் பல பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ள யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. 3 குட்டிகளுடன் சுற்றி திரிந்த 14 காட்டு யானைகளை, நேற்று முன்தினம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், சானமாவு, பேரண்டப்பள்ளி, போடூர் உள்ளிட்ட பகுதிகளில் 6 யானைகள் பிரிவுகளாக பிரிந்துள்ளன. இதில் ஒற்றை யானை ஒன்று அம்பலட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியது. விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் வந்து பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றை யானையை போடூர்பள்ளத்திற்கு விரட்டியடித்தனர். இதனிடையே, ஓசூர்-சானமாவு வனப்பகுதியில் 6 யானைகள் முகாமிட்டு, ராமாபுரம், ஆழியாளம், கோபசந்திரம், நாயனகொண்டஅக்ரஹாரம், ராஜாப்புரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகள், இரவில் கிராமத்திற்கு வருவதும், பகல்நேரத்தில் வனத்திற்குள் சென்று விடுவதும் வாடிக்கையாகஉள்ளது. யா னை கள்பயிர்களை சேதப் படுத்தி வருவ தால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பல பிரிவுகளாக பிரிந்திருக்கும் இந்த யானைகளை ஒன்றிணைத்து, அடர்ந்த தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா