×

பா.ஜ கூட்டத்தில் பங்கேற்க ெபான்.ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி பயணம்

நாகர்கோவில், மே 24: கன்னியாகுமரி பா.ஜ வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோணம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நேற்று காலையிலேயே வந்து அங்குள்ள வேட்பாளர்கள் வரவேற்பு மையத்தில் அமர்ந்திருந்து ஒவ்வொரு சுற்று நிலவரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார். வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் வரை அவர் அங்கேயே அமர்ந்திருந்தார்.

காங்கிரஸ் சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார் அளித்த பேட்டி குறித்து ெசய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, வசந்தகுமாருக்கு வாழ்த்துக்கள். அவர் கூறியவற்றிற்கு இனி வரும் நாட்களில் நான் பதிலளிப்பேன். இன்று வேண்டாம். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ேதால்வியை கண்டு வருத்தமில்லை.

பா.ஜகவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே பா.ஜ கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது 24ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான் இன்று ெடல்லி ெசல்கிறேன் என்றார்.

Tags : Rathore Krishnan ,Delhi ,meeting ,BJP ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...