×

6 லட்சம் வாக்குகளை கடந்து சாதனை

கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறைவில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை கடந்திருந்தார். மொத்தம் உள்ள வாக்குகளில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 248 வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருந்தபோது காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் பெற்ற வாக்குகள் 6 லட்சத்து 6 ஆயிரத்து 51 ஆகும். அப்போது பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 50 ஆயிரத்து 288 வாக்குகளை பெற்றிருந்தார்.  நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் 6 லட்சம் வாக்குகளை கடந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அந்த வரலாறு இந்த தேர்தலில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

* 14வது மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் 4 லட்சத்து 10 ஆயிரத்து 91 வாக்குகள் பெற்றிருந்தார்.

* 15வது மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற ஹெலன் டேவிட்சன் 3 லட்சத்து 20 ஆயிரத்து 161 வாக்குகளை வெற்றிருந்தார்.

* கடந்த 2014ல் 16 வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

*  2014 மக்களவை தேர்தலில் இரண்டாம் இடம்பெற்ற எச்.வசந்தகுமார் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த முறை அந்த எண்ணிக்கைக்கும் அதிகமாக அவரது வாக்கு வித்தியாசம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...