மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி 4.59 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திருச்சியை கைப்பற்றியது காங்கிரஸ் தேமுதிக, அமமுக உள்பட அனைவருக்கும் டெபாசிட் காலி

திருச்சி, மே 24:   திருச்சி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திருச்சி மக்களவை தொகுதியில் திருநாவுக்கரசர் (காங்), இளங்கோவன் (தேமுதிக), சாருபாலா (அமமுக), ஆனந்தராஜா (மநீம), வினோத் (நாம் தமிழர்) மற்றும் 19 சுயேச்சைகள் களத்தில் இருந்தனர். இத்தொகுதியின் மொத்த ஓட்டுகள் 15 லட்சத்து, 8 ஆயிரத்து 963 ஆகும். இதில் பதிவான வாக்குகள் 10 லட்சத்து 33 ஆயிரத்து 625 (தபால் ஓட்டு நீங்கலாக). நோட்டா 14,296. இது 68 சதவீதம் ஆகும். மொத்த தபால் ஓட்டுகள்  8,068. இதில் 717 ஓட்டுகள் செல்லாதவை. நோட்டா 141. திருச்சியில் மொத்தம் 25 சுற்றுகளும் சேர்த்து திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தேமுதிக இளங்கோவன் (1,61,999), அமமுக சாருபாலா (1,00,818), மநீம ஆனந்தராஜா (42,134), நாம் தமிழர் வினோத் (65,256) வாக்குகள் பெற்றிருந்தனர். முடிவில் நோட்டாவுக்கு 14,437 ஓட்டுக்கள் கிடைத்திருந்தது.டெபாசிட் பெறுவதற்கு பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டு பெற வேண்டும். திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக, அமமுக உள்ளிட்ட 23 வேட்பாளர்களும் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்கூட வாங்காமல் டெபாசிட் இழந்தனர்.

சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

முதல் சுற்று:  திருநாவுக்கரசர் (காங்) 30,109, இளங்கோவன்(தேமுதிக) 7,943, சாருபாலா (அமமுக) 5,743, வினோத் (நாம் தமிழர்) 2921, ஆனந்தராஜா (மநீம) 1,722.

2வது சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 29,145, இளங்கோவன்(தேமுதிக) 7768, சாருபாலா(அமமுக) 4745, ஆனந்தராஜா (மநீம) 1857, வினோத்(நாம் தமிழர்) 3424.

3ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 30,057, இளங்கோவன் (தேமுதிக) 8,856, சாருபாலா(அமமுக)4,124, ஆனந்தராஜா (மநீம) 2,499, வினோத்(நாம் தமிழர்) 3,548.

4ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 30,130, இளங்கோவன்(தேமுதிக) 7,820, சாருபாலா(அமமுக) 5,165, ஆனந்தராஜா (மநீம) 2,258, வினோத்(நாம் தமிழர்) 2,940.

5ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 30,843, இளங்கோவன்(தேமுதிக) 9,160, சாருபாலா(அமமுக) 5,001, ஆனந்தராஜா (மநீம) 2,598, வினோத்(நாம் தமிழர்) 3,040.

6ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 26,886, இளங்கோவன்(தேமுதிக) 9,928, சாருபாலா(அமமுக) 4,628 ஆனந்தராஜா (மநீம) 2,994 வினோத்(நாம் தமிழர்) 3,151.

7ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 29,702, இளங்கோவன்(தேமுதிக) 8,301, சாருபாலா(அமமுக) 4,507, ஆனந்தராஜா (மநீம) 2,738, வினோத்(நாம் தமிழர்) 2,719.

8ம் சுற்று: திருநாவுக்கரசர்(காங்) 30,265. இளங்கோவன்(தேமுதிக) 8,790, சாருபாலா(அமமுக) 5,122, ஆனந்தராஜா (மநீம) 3,152, வினோத்(நாம் தமிழர்) 3,433.

9ம் சுற்று: திருநாவுக்கரசர்(காங்) 33,283, இளங்கோவன்(தேமுதிக) 7,852, சாருபாலா(அமமுக) 5,240, ஆனந்தராஜா (மநீம) 2,391, வினோத்(நாம் தமிழர்) 3,253.

10ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 30,637, இளங்கோவன்(தேமுதிக) 7,842, சாருபாலா (அமமுக) 4,198, ஆனந்தராஜா (மநீம) 2,617, வினோத்(நாம் தமிழர்) 2,859.

11ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 32,593, இளங்கோவன்(தேமுதிக) 7,077, சாருபாலா(அமமுக) 4,781, ஆனந்தராஜா (மநீம) 2,297, வினோத்(நாம் தமிழர்) 3,156.

12ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 33,451, இளங்கோவன்(தேமுதிக) 7,634 சாருபாலா(அமமுக) 6,103, ஆனந்தராஜா (மநீம) 1,683, வினோத்(நாம் தமிழர்) 3,230.

13ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 30,938, இளங்கோவன்(தேமுதிக) 7,682, சாருபாலா(அமமுக) 5,866 ஆனந்தராஜா (மநீம) 1,767. வினோத்(நாம் தமிழர்) 3,312.

14ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 30,906, இளங்கோவன்(தேமுதிக) 7,206, சாருபாலா(அமமுக) 5,506,  ஆனந்தராஜா(மநீம) 1,543, வினோத்(நாம் தமிழர்) 3,464.

15ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 30,645, இளங்கோவன்(தேமுதிக) 7,005, சாருபாலா(அமமுக) 4,779, ஆனந்தராஜா(மநீம) 1,830, வினோத்(நாம் தமிழர்) 3,229.

16ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 32,216, இளங்கோவன்(தேமுதிக) 6,395, சாருபாலா(அமமுக) 5,391,  ஆனந்தராஜா(மநீம) 2,125, வினோத்(நாம் தமிழர்) 3,250.

17ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 30,185, இளங்கோவன்(தேமுதிக) 6,493. சாருபாலா(அமமுக) 5,390,  ஆனந்தராஜா(மநீம) 1,709, வினோத்(நாம் தமிழர்) 3,671.

18ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 25,773, இளங்கோவன்(தேமுதிக) 6,666, சாருபாலா(அமமுக) 4,435,  ஆனந்தராஜா(மநீம) 1,615, வினோத்(நாம் தமிழர்) 2,820.

19ம் சுற்று:  திருநாவுக்கரசர்(காங்) 21,773, இளங்கோவன்(தேமுதிக) 5,860, சாருபாலா(அமமுக) 3,706,  ஆனந்தராஜா(மநீம) 1,295, வினோத்(நாம் தமிழர்) 2,636.

20வது சுற்று: திருநாவுக்கரசர்(காங்) 11,318, இளங்கோவன்(தேமுதிக) 3,209, சாருபாலா(அமமுக) 1,218, ஆனந்தராஜா (மநீம) 504, வினோத்(நாம் தமிழர்) 1,688. வாக்குகள் பெற்றனர்.

Related Stories: