வாக்குப்பதிவு இயந்திர அறையில் கண்காணிப்பு கேமரா திடீர் பழுது

திருச்சி, மே 24: திருச்சி மக்களவை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சாரநாதன் கல்லூரியில் நேற்று நடந்தது. இங்கு மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற வாக்குகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தது. இதில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று அதிகாலை 1.30 மணி முதல் 4 மணி வரை கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை. இதையறிந்த காங்கிரஸ் முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாத நேரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார் செய்தனர்.

Advertising
Advertising

தொடர்ந்து பல நாட்களாக கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்ததால் வெப்பம் அதிகரித்து செயல்பாடு இல்லாமல் இருந்துள்ளது. வேறு எதுவும் முறைகேடு நடக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முகவர் வக்கீல் மகேந்திரன் கலெக்டர் சிவராசுவிடம் புகார் செய்தார். இதையடுத்து கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும்  விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: