×

கேரளாவில் அமோகம் 20 ெதாகுதிகளில் 19ல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

திருவனந்தபுரம், மே 24: கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளிலும், இடதுமுன்னணி ஒரு ெதாகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் பா.ஜவால் கேரளாவில் கணக்கு தொடங்க முடியவில்லை. கேரளாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்தது. இடதுமுன்னணி கூட்டணியில் மார்க்சிஸ்ட் 14 தொகுதிகளிலும். இந்திய கம்யூ. 4  தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் ஆதரவு சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.  காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் முஸ்லிம் லீக் 2  தொகுதிகளிலும் ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ் (எம்) தலா ஒரு ெதாகுதியிலும்  போட்டியிட்டன.

கேரளாவில் மொத்தம் 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாயின. ராகுல் போட்டியிட்ட வயநாடு உட்பட 8 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாயின. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன, தொடக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்ட் கோட்டையாக கருதப்படும் தொகுதிகளில் கூட காங்கிரஸ் வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலை வகித்தனர்.

இந்த நிலையில் ஆலப்புழா தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட் கோட்டையாக கருதப்படும் ஆற்றிங்கல், பாலக்காடு, ஆலத்தூர்,  தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 8 வேட்பாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். முஸ்லிம் லீக் சார்பில் மலப்புரம் தொகுதியில் போட்டியிட்ட குஞ்ஞாலிகுட்டி 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சானுவை தோற்கடித்தார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும் இடதுமுன்னணி 8 தொகுதிகளிலும் வெற்றி ெபற்றது குறிப்பிடத்தக்கது.

கேரள வரலாற்றில் இதுவரை இடதுமுன்னணி இந்த அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த தேர்தலில் பா.ஜ.விற்கு திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஒரு தொகுதியில் பா.ஜ.விற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதுவரை கேரளாவில் பாராளுமன்ற தேர்தலி–்ல் பா.ஜ. வெற்றி ெபற்றதில்லை. இந்த தேர்தலில் கண்டிப்பாக கணக்கை பா.ஜ. தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருவனந்தபுரம் தொகுதியில் ேபாட்டியிட்ட கும்மனம் ராஜசேகரனால் 2வது இடத்தையே பிடிக்க முடிந்தது. திருவனந்தபுரம் தொகுதியில் ேபாட்டியிடுவதற்காக இவர் மிசோரம் மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியிலும் பா.ஜ. தோல்வியடைந்தது. இங்கு போட்டியிட்ட பா.ஜ. மாநில பொது ெசயலாளர் சுரேந்திரனால் 3வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் இம்முறையும் கேரளாவில் பா.ஜவால் கணக்கை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1. திருவனந்தபுரம்
சசிதரூர் (காங்.)-  4,14,057
கும்மனம் ராஜசேகரன் (பா.ஜ.)- 3,13,925
வாக்கு வித்தியாசம் -1,00,132
2. ஆற்றிங்கல்
அடூர்பிரகாஷ் (காங்கிரஸ்) - 3,79,469
சம்பத் (மார்க்சிஸ்ட்)- 3,40,298
வாக்கு வித்தியாசம்- 39,171
3. கொல்லம்
பிரேம சந்திரன் (ஆர்எஸ்பி., காங்.கூட்டணி) - 4,97,264
பாலகோபால் (மார்க்சிஸ்ட்) - 3,47,492
வாக்கு வித்தியாசம்- 1,49,772
4. பத்தனம்திட்டா
ஆன்டோ ஆன்டனி (காங்) -3,80,089
வீணாஜார்ஜ் (மார்க்சிஸ்ட்) -3,35,476
வாக்கு வித்தியாசம்- 44,613
5. மாவேலிக்கரை
கொடிக்குன்னில் சுரேஷ் (காங்) - 4,37,997
சிட்டயம் கோபகுமார் (மார்க்சிஸ்ட்) -3,76,497
வாக்கு வித்தியாசம்-61,500
6. ஆலப்புழா
ஆரிப் (மார்க்சிஸ்ட்) - 4,43,003
ஷானிமோள் உஸ்மான் (காங்) -4,33,790
வாக்கு வித்தியாசம்-9,213
7. கோட்டயம்
தாமஸ் சாழிக்காடன் (காங். கூட்டணி) - 4,21,046
வாசவன் (மார்க்சிஸ்ட்) - 3,14,787
வித்தியாசம் 1,06,259
8. இடுக்கி
டீன்குரியாகோஸ் (காங் கூட்டணி) - 4,98,493
ஜோய்ஸ் ஜார்ஜ் (மார்க்சிஸ்ட் ஆதரவு சுயேச்சை) - 3,27,440
வித்தியாசம்-1,71,053
9. எர்ணாகுளம்
ஹைபிஈடன் (காங்) - 4,91,263
ராஜீவ் (மார்க்சிஸ்ட்) 3,22,110
வித்தியாசம் 1,69,153
10. சாலக்குடி
பென்னி பெஹன்னான் (காங்) - 4,73,444
இன்னசென்ட் (மார்க்சிஸ்ட்) - 3,41,170
வாக்கு வித்ியாசாம் 1,32,274
11. திருச்சூர்
பிரதாபன் (காங்) - 4,15,089
ராஜாஜிமேத்யூதாமஸ் (இந்திய கம்யூ) - 3,21,456
வித்தியாசம் 93,633
12. ஆலத்தூர்
ரம்யாஹரிதாஸ் (காங்) - 5,33,815
பிஜூ (மார்க்சிஸ்ட்) - 3,74,847
வித்தியாசம் 1,58,968
13. பாலக்காடு
கண்டன்(காங் )- 3,99,274
ராஜேஷ் (மார்க்சிஸ்ட்) - 3,87,637
வாக்கு வித்ியாசம்- 11,637
14. பொன்னானி
முகம்மது பஷீர் (காங் கூட்டணி)- 5,21,824
அன்வர் (மார்க்சிஸ்ட் கூட்டணி)-3,28,551
வாக்கு வித்தியாசம்- 1,93,273
15. மலப்புரம்
குஞ்ஞாலிகுட்டி (முஸ்லிம் லீக்)- 5,89,873
ஷானு (மார்க்சிஸ்ட்)- 3,29,720
வாக்கு வித்தியாசம்- 2,60,153
16. கோழிக்கோடு
ராகவன் (காங்)-4,93,444
பிரதீப்குமார் (மார்க்சிஸ்ட்)-4,08,219
வாக்கு வித்தியாசம்-85,225
17. வயநாடு
ராகுல்காந்தி (காங்)-7,06,367
சுனீர் (இந்திய கம்யூ)-2,74,597
வாக்கு வித்தியாசம்-4,31,770
18. வடகரை
முரளிதரன் (காங்) -5,26,755
ஜெயராஜன் (மார்க்சிஸ்ட்)-4,42,092
வாக்கு வித்தியாசம் 84,663
19. கண்ணூர்
சுதாகரன் (காங்) - 5,29,741
மதி -(மார்க்சிஸ்ட்) -4,35,182
வாக்கு வித்தியாசம்-94,559
20.காசர்கோடு
ராஜ்மோகன் உன்னித்தான் (காங்) -47,4961
சதீஷ் சந்திரன் (மார்க்சிஸ்ட்) -4,.34,523
வாக்கு வித்தியாசம் -40,438

Tags : Kerala ,coalition ,Congress ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...