×

நாகை எம்பி தொகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் வெற்றி 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார்

திருவாரூர், மே 24: நாகை எம்பி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.நாகை மக்களவை தொகுதியில் செல்வராஜ்(இந்திய கம்யூ), சரவணன்(அதிமுக), செங்கொடி(அமமுக), மாலதி(நாம் தமிழர் கட்சி), குருவையா(மநீம), அனிதா( பகுஜன் சமாஜ்) மற்றும் 9 சுயேட்சைகள் என 15 பேர் களத்தில் உள்ளனர். நாகை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது.4 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் 1,10,967 வாக்குகள், அதிமுக சரவணன் 64,645 வாக்குகள், அமமுக செங்கொடி 15,100 வாக்குகள், நாம் தமிழர் கட்சி மாலதி 10,068 வாக்குகள், மநீம குருவையா 2,514 வாக்குகள் பெற்றனர். நோட்டாவுக்கு 1787 வாக்குகள் கிடைத்தது.சுற்றுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

7வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 1,96,440, சரவணன்(அதிமுக): 1,16,182, செங்கொடி(அமமுக): 27,026, மாலதி(நாம் தமிழர்): 17,881, குருவையா(மநீம): 4,123, நோட்டா: 3360
8வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 2,23,567, சரவணன்(அதிமுக): 1,31,969, செங்கொடி(அமமுக): 30,197, மாலதி(நாம் தமிழர்): 20,651, குருவையா(மநீம): 5079, நோட்டா: 3895
9வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 2,50,620, சரவணன்(அதிமுக): 1,46,721, செங்கொடி(அமமுக): 33,359, மாலதி(நாம் தமிழர்): 23, 954, குருவையா(மநீம): 6254, நோட்டா: 4456
10வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 2,77,780, சரவணன்(அதிமுக): 1,63,418, செங்கொடி(அமமுக): 36,645, மாலதி(நாம் தமிழர்): 26,526, குருவையா(மநீம): 7493, நோட்டா: 5011
11வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 3,06,372, சரவணன்(அதிமுக): 1,78,659, செங்கொடி(அமமுக): 40,905, மாலதி(நாம் தமிழர்): 29,253, குருவையா(மநீம): 8652, நோட்டா: 5503
12வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 3,34,247, சரவணன்(அதிமுக): 1,94,728, செங்கொடி(அமமுக): 44,369, மாலதி(நாம் தமிழர்): 31,863, குருவையா(மநீம): 1906, நோட்டா: 6012.
13வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 3,61,952, சரவணன்(அதிமுக): 2,12,063, செங்கொடி(அமமுக): 49,409, மாலதி(நாம் தமிழர்): 36,225, குருவையா(மநீம): 10,431, நோட்டா: 6571.
14வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 3,89,488, சரவணன்(அதிமுக): 2,30,031, செங்கொடி(அமமுக): 52,490, மாலதி(நாம் தமிழர்): 38,900, குருவையா(மநீம): 11,221, நோட்டா: 7101.
15வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 4,14,816, சரவணன்(அதிமுக): 2,46,023, செங்கொடி(அமமுக): 55,950, மாலதி(நாம் தமிழர்): 41,239, குருவையா(மநீம): 11,934, நோட்டா: 7539.
16வது சுற்று: செல்வராஜ்(இந்திய கம்யூ.): 4,33,972, சரவணன்(அதிமுக): 2,59,438, செங்கொடி(அமமுக): 59,289, மாலதி(நாம் தமிழர்): 43,640, குருவையா(மநீம): 12,585, நோட்டா: 7984
21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் அதிமுக வேட்பாளர் சரவணனை விட 2,01,936 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்று உள்ளார்.
இன்னும் 2 சுற்று வாக்குகள் எண்ண வேண்டியது உள்ளது.இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்  செல்வராஜ் அதிமுக வேட்பாளர் சரவணனை விட தொடர்ந்து கூடுதல் வாக்குகளை பெற்று வருவதால் அவர் வெற்றி பெறுவது உறுதி என தெரிகிறது.



Tags : Indian Council ,Selvaraj ,AIADMK ,candidate ,
× RELATED பைக் மீது வேன் மோதி விபத்து மகன் பலி, தாய் படுகாயம்