மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கும்பகோணம், மே 24:  மயிலாடுதுறை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதையடுத்து கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில் அருகில் திமுக நகரம் சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.மயிலாடுதுறை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றார். இதையடுத்து கும்பகோணம் கட்சி அலுவலகத்திலிருந்து வாகனத்தில் ஊர்வலமாக திமுகவினர் ஊர்வலமாக வந்து உச்சிபிள்ளையார்கோயில் அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதைதொடர்ந்து கும்பகோணம் நகரம் முழுவதும் வாகனத்தில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தவாறு சென்றனர். நகர அவைத்தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராசாராமன், நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: