குப்பை வண்டியில் எடுத்து வந்து உணவு, தண்ணீர் வழங்கல் வாக்கு எண்ணும் அதிகாரிகள் அதிர்ச்சி

தஞ்சை, மே 24:   தஞ்சை மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் பணியில் 1,110 பேர் ஈடுபட்டனர். பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும், விவிபேட் இயந்திரங்களையும் எடுத்து வந்து மீண்டும் கொண்டு செல்லும் பணியில் 400 களப்பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் துணை ரானுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தண்ணீர் கேன், டீ மற்றும் காலை, மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதை அந்தந்த இடத்துக்கு எடுத்து மாநகராட்சிக்கு புதிதாக பேட்டரியில் இயங்கும் வகையில் வாங்கியுள்ள குப்பை வண்டிகளில் மாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் எடுத்து வந்து வழங்கினார். இது ஊழியர்கள் மற்றும் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Related Stories: