மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையான நேற்று வெறிச்சோடிய குடந்தை பகுதி

கும்பகோணம், மே 24:  மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திருவிடைமருதூர், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த தொகுதி முடிவு மற்றும் இந்திய அளவில் தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் உள்ள டிவிக்கள் முன் முடங்கினர். இதனால் கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. மேலும் கும்பகோணம் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: