×

புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையம் விரைவில் திறக்க பயணிகள் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 24: புதுக்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் தொடங்கப்பட்ட காவல் உதவி மையம் பூட்டிக்கிடப்பதால் அதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து அறந்தாங்கி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, கோவை, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தினமும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்லும் இடத்தில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தின் சார்பில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டது. இந்த காவல் உதவி மையம் தற்போது பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது.எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உள் காவல் உதவி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Tags : Passengers ,aid center ,bus station ,Pudukottai ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!