திருப்பூர் மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு 6வது இடம்

திருப்பூர், மே 24: திருப்பூர் மக்கவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன், அதிமுக.,வின் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அமமுக.,வின் செல்வம், மக்கள் நீதி மய்யத்தின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் ஜெகநாதன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர். இதில் சுப்பராயன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2வது இடத்தையும் ஆனந்தனும்,, 3வது இடத்தை சந்திரகுமாரும், 4வது இடத்தை செல்வமும், 5வது இடத்தை ஜெகநாதனும் பெற்றனர். 22 ஆயிரம் வாக்குகள் பெற்ற நோட்டாவுக்கு 6வது இடம் கிடைத்தது.

Related Stories: