×

போட்டியிட்ட 12 பேரில் 10 பேர் டெபாசிட் இழந்தனர்

திருப்பூர், மே 24: திருப்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 12 பேரில் 10 பேர் டெபாசிட் இழந்தனர்.திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திருப்பூர் தொகுதியில், அதிமுக., தி.மு.க., இந்திய கம்யூ., மக்கள் நீதி மய்யம், அமமுக., நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கே டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். திருப்பூர் தொகுதியில் மொத்தம் 11,20,010 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, டெபாசிட் தொகையினை பெற சுமார் 1,86 லட்சம் வாக்குகள் பெறப்பட வேண்டும். அதன்படி, திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூ., கட்சி வேட்பாளர் சுப்பராயன், 2ம் இடம் பிடித்த அதிமுக, வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே 1.86 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். 3வது இடம் பிடித்துள்ள மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திரகுமார் 64,657 வாக்குகளையும், 4வது இடம் பிடித்த அமமுக வேட்பாளர் செல்வம் 43,819 வாக்குகளையும், 5வது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதன் 42,189 வாக்குகளையும் பெற்றார். சந்திரகுமார், செல்வம், ஜெகநாதன் உட்பட 10 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் டெபாசிட் இழந்தனர்.

Tags : contestants ,
× RELATED மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி கோவை...