×

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி

பெரம்பலூர், மே 24: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளரான ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பெரம்பலூர் (தனி), துறையூர் (தனி), லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், அதிமுக வேட்பாளர் சிவபதி, பசக வேட்பாளர் முத்துலட்சுமி, நாதக வேட்பாளர் சாந்தி, அமமுக வேட்பாளர் ராஜசேகர் உள்பட 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தா காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகளை துவக்கி வைத்தார். அதன்படி ஒவ்வொரு சுற்றுகளின் விவரம் பின்வருமாறு:1வது சுற்று: பாரிவேந்தர் (ஐஜேகே) 32,787 வாக்குகள், அதிமுக 14,710 வாக்குகள், நாதக 2,560 வாக்குகள், அமமுக 1,948 வாக்குகள், பசக 254 வாக்குகள் பெற்றனர். நோட்டாவுக்கு 557 வாக்குகள் கிடைத்தன.

2வது சுற்று: ஐஜேகே 68,346, அதிமுக 28,498, நாதக 4803, அமமுக 3,630, பசக முத்துலட்சுமி 470, நோட்டா 977 வாக்குகள்.
3வது சுற்று: ஐஜேகே 1,01,309, அதிமுக 42,801, நாதக 7,383, அமமுக 5,409, பசக 643, நோட்டா 1,542 வாக்குகள்.
4வது சுற்று: ஐஜேகே 1,34,269, அதிமுக 55,329, நாதக 10,177, அமமுக 7,500, பசக 838, நோட்டா 2,106 வாக்குகள்.
5வது சுற்று: ஐஜேகே 1,68,849, அதிமுக 69,546, நாதக 13,334, அமமுக 10,267, பசக 1,053, நோட்டா 2,743 வாக்குகள்.
6வது சுற்று: ஐஜேகே 2,04,347, அதிமுக 84,960, நாதக 15,645, அமமுக 12,492, பசக 1,263. நோட்டா 3,194 வாக்குகள்.
7வது சுற்று: ஐஜேகே 2,39,603, அதிமுக 99,397, நாதக 18,253, அமமுக 14,819, பசக 1,482, நோட்டா 3,695 வாக்குகள்.
8வது சுற்று: ஐஜேகே 2,74,106, அதிமுக 1,14,860, நாதக 20,815, அமமுக 17,100, பசக 1,738, நோட்டா 4170 வாக்குகள்.
9வது சுற்று: ஐஜேகே 3,08,183, அதிமுக 1,30,102, நாதக 23,373, அமமுக 19,841, பசக 2,028, நோட்டா 4,694 வாக்குகள்.
10வது சுற்று: ஐஜேகே 3,42,542, அதிமுக 1,43,718, நாதக 26,218, அமமுக 21,846, பசக 2,230, நோட்டா 5,195 வாக்குகள்.
11வது சுற்று: ஐஜேகே 3,77,664, அதிமுக 1,58,742, நாதக 29,166, அமமுக 23,974, பசக 2,526, நோட்டா 5,764 வாக்குகள்.
12வது சுற்று: ஐஜேகே 4,14,769, அதிமுக 1,73,953, நாதக 32,112, அமமுக 25,804, பசக 2,785, நோட்டா 6,494 வாக்குகள்.
13வது சுற்று: ஐஜேகே 4,50,611, அதிமுக 1,87,367, நாதக 34,979, அமமுக 28,048, பசக 3,032, நோட்டா 7,149 வாக்குகள்.
14வது சுற்று: ஐஜேகே 4,85,160, அதிமுக 2,00,250 , நாதக 38,047, அமமுக 30,450, பசக 3,253, நோட்டா 7,819 வாக்குகள்.
15வது சுற்று: ஐஜேகே 5,20,847, அதிமுக 2,13,860 , நாதக 41,098, அமமுக 32,712, பசக 3,476, நோட்டா 8,564 வாக்குகள்.
16வது சுற்று: ஐஜேகே 5,54,737, அதிமுக 2,28,656 , நாதக 43,784, அமமுக 36,154, பசக 3,703, நோட்டா 9,147 வாக்குகள்.
17வது சுற்று: ஐஜேகே 5,89,912 , அதிமுக 2,42,372 , நாதக 46,660 , அமமுக 38,646 , பசக 3,962, நோட்டா 9,723 வாக்குகள்.
18வது சுற்று: ஐஜேகே 6,23,534, அதிமுக 2,55,543, நாதக 49,308, அமமுக 41,339, பசக 4,191, நோட்டா 10,285 வாக்குகள்.
19வது சுற்று: ஐஜேகே 6,45,142, அதிமுக 2,65,507, நாதக 51,010, அமமுக 42,663, பசக 4,344, நோட்டா 10,706 வாக்குகள்.
20வது சுற்று: ஐஜேகே 6,54,112, அதிமுக 2,69,627, நாதக 51,705, அமமுக 43,614, பசக 4,389, நோட்டா 10,875 வாக்குகள்.
21வது சுற்று: ஐஜேகே 6,59,953, அதிமுக 2,72,067, நாதக 52,075, அமமுக 44,013, பசக 4,423, நோட்டா 10,964 வாக்குகள்.
22வது சுற்று: ஐஜேகே 6,66,812, அதிமுக 2,75,282, நாதக 52,514, அமமுக 44,550, பசக 4,482, நோட்டா 11,077 வாக்குகள்.
23வது சுற்று: ஐஜேகே 6,72,893, அதிமுக 2,77,890, நாதக 52,915, அமமுக 44,984, பசக 4,524, நோட்டா 11,161 வாக்குகள்.
இறுதியாக ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697, அதிமுக வேட்பாளர் சிவபதி 2,80,179, நாதக வேட்பாளர் சாந்தி 53,545, அமமுக வேட்பாளர் ராஜசேகர் 45,591, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முத்துலட்சுமி 4,586  வாக்குகள் பெற்றிருந்தனர். நோட்டாவுக்கு 11,325 வாக்குகள் கிடைத்தது. திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், அதிமுக வேட்பாளர் சிவபதியைவிட 4,03,518 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டவர்களில் அதிமுக வேட்பாளர் சிவபதியை தவிர மீதமுள்ள 17 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.


Tags : Parameshwara ,constituency ,Perambalur Lok Sabha ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...