குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர்,மே24:திருப்பூர், மாநகரப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அள்ளுவதற்கு போதுமான துப்புரவு தொழிலாளர்கள் இல்லாததால் தீ வைத்து அழிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பூர், மாநகரப்பகுதியில் போதுமான துப்புரவு தொழிலாளர்கள் இல்லாததால் குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு தீ வைத்து அழிக்கப்படுகின்றது.

பாலித்தீன் குப்பைகள், அழுகிய காய்கறிகள், பழைய காலணி, டயர்,  உடைந்து போன பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டைவைகள் குப்பையில் வீசப்படுகின்றது. இத்தகைய, குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் ஒரே இடத்தில் மலை போல் குவித்து வைக்கப்படுகிறது. பின்னர், யாரேனும் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

 

மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கும் பொழுது காற்றில் நச்சு தன்மை கலக்கிறது. இதனால், அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், வசிக்கக்கூடிய பொதுமக்கள் அனைவரும் மூச்சு விடமுடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூர் மாநகரப்பகுதியில் போதுமான துப்புரவு தொழிலாளர்கள் நியமித்து, முறையாக குப்பைகள் எடுத்து செல்ல வேண்டும். மேலும், குப்பைகளுக்கு யாரும் தீ வைத்து எரிக்க கூடாது என அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: