அவிநாசியில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அவிநாசி, மே 24:அவிநாசியில் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை நேற்று அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். அவிநாசியில் - கோவை மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இதன் குடோன் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் உள்ளது. இங்கு தடை செய்யபட்ட பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் டம்ளர் ஸ்ட்ரா மற்றும் பல வகையான பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பு வைத்து விற்பனை செய்வதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவிநாசி பேரூராட்சி செயல்அலுவலர் ஈஸ்வரமுர்த்தி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, மேற்பார்வையாளர் பாலு மற்றும் துப்புரவு பணியாளர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது குடோனில் 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடைசெய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் இருப்பு வைத்தாலே விற்பனை செய்தாலோ ரூ.1 லட்சம் வரை வரை அபராதம் விதிக்கப்படும் என்றும்,கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் பேரூராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: