×

ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி திமுக கூட்டணி கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்

பெரம்பலூர், மே 24: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளரான ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தருக்கு திமுக கூட்டணி கட்சியினர் வரவேற்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.பெரம்பலூர் மக்களவை தொகுதியின் 17வது எம்பியாக திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பும் மறு சீரமைப்புக்கு பின்பும் வேறு யாரும் பெறாதபடிக்கு பாரிவேந்தர் மிக அதிக வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளரை படுதோல்வியடைய செய்து வெற்றி பெற்றுள்ளார். இதைதொடர்ந்து திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சியினர் ஒன்று திரண்டு பெரம்பலூர் நகர வீதிகளில் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். பெரம்பலூர் பழைய பஸ்ஸ்டாண்ட், புதுபஸ்ஸ்டாண்ட், சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.பாரிவேந்தர் வெற்றி பெற்றதையடுத்து திமுக மற்றும் ஐேஜகே கட்சியினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags : Bareevantar ,IGK ,alliance ,DMK ,celebration ,
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு