×

மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி

மயிலாடுதுறை, மே 24: மயிலாடுதுறை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் அமோக வெற்றி பெற்றுள்ளார்.மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் செ.ராமலிங்கம் (திமுக), ஆசைமணி (அதிமுக), செந்தமிழன் (அமமுக), ரியாசுதீன் (மநீம), சுபாஷினி (நாதக), கல்யாண சுந்தரம் (பகுச) மற்றும் 21 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் முடிவடைந்து  மின்னணு வாக்கு பெட்டிகள் அனைத்தும் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு 4 அடிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று (23ம்தேதி) காலை 8 மணியளவில் துவங்கியது. மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் மொத்தம் 14,84,348 வாக்குகள். இதில் 10,91,921 வாக்குகள் பதிவானது. இதில் வேட்பாளர்கள் சுற்றுவாரியாக பெற்ற வாக்குகள் விபரம்:முதல்சுற்று: திமுக 27,901,  அதிமுக 17,500, அமமுக 4,044, நாதக 1,460, மநீம 328,நோட்டா 323, முன்னிலை திமுக 10,401.
2வது சுற்று: திமுக 27,145, அதிமுக 16,997, அமமுக 2,861,நாதக 1,435, மநீம 386, நோட்டா 321, முன்னிலை திமுக 20,549.
3வது சுற்று: திமுக 27,815, அதிமுக 18,530, அமமுக 3,157, நாதக 1,871, மநீம 245, நோட்டா 323, முன்னிலை திமுக 29, 834.
4வது சுற்று: திமுக  27,354, அதிமுக 18,316, அமமுக 2,949, நாதக 2,365, மநீம 480 நோடடா 391, முன்னிலை திமுக 38,872.
5வது சுற்று: திமுக 27,978, அதிமுக 16,669, அமமுக 3,185, நாதக 1,871, மநீம 609, நோட்டா 353, முன்னிலை திமுக 50,181.
6வது சுற்று: திமுக 30,579, அதிமுக 14,409, அமமுக 3,029, நாதக 1,870, மநீம 775, நோட்டா 330, முன்னிலை திமுக 66,351.
7வது சுற்று: திமுக 29,993, அதிமுக  15,839, அமமுக 3,034, நாதக 1,939, மநீம 552, நோட்டா 352, முன்னிலை திமுக 80,505.
8வது சுற்று: திமுக 28,769, அதிமுக 15,262, அமமுக 2,384, நாதக 1,965, மநீம 631, நோட்டா    324, முன்னிலை திமுக 94,012.
9வது சுற்று: திமுக 30,315, அதிமுக 14,344, அமமுக 2,647, நாதக 2,315, மநீம 798, நோட்டா 377, முன்னிலை திமுக 1,09,983.
10வது சுற்று: திமுக 29,928, அதிமுக 15,841, அமமுக 3,459, நாதக 1,974, மநீம 1,155, நோட்டா 474, முன்னிலை திமுக 1,24,070.
11வது சுற்று: திமுக  27,977, அதிமுக 14,089, அமமுக 3,109, நாதக 1,736, மநீம 987, நோட்டா 410, முன்னிலை திமுக 1,37,958.
12 வது சுற்று: திமுக 28,954, அதிமுக 15,473, அமமுக 3,603, நாதக 2,068, மநீம 1,360, நோட்டா 476, முன்னிலை திமுக 1,51,439.
13 வது சுற்று: திமுக 28,879, அதிமுக 13,284, அமமுக 3,096, நாதக 1,850, மநீம 1,264, நோட்டா 391, முன்னிலை திமுக 1,67,034.
14வது சுற்று: திமுக 29,892, அதிமுக 16,191, அமமுக 3,915, நாதக 2,196, மநீம 1,136, நோட்டா 498, முன்னிலை திமுக 1,80,735.
15வது சுற்று: திமுக 25,868: அதிமுக 15,919, அமமுக 3,978, நாதக 1,691, மநீம 829, நோட்டா 386, முன்னிலை திமுக 1,90,684.
16வது சுற்று: திமுக 29,622 அதிமுக 16,217, அமமுக 3,700, நாதக 1,855, மநீம 855, நோட்டா 444, முன்னிலை திமுக 2,04,089.
17வது சுற்று: திமுக 27,758, அதிமுக 18,211, அமமுக 3,715, நாதக 2,206, மநீம 954, நோட்டா 441, முன்னிலை திமுக 2,13,636.
18வது சுற்று: திமுக 26,623, அதிமுக 15,088, அமமுக  3,832, நாதக 2,329, மநீம 937, நோட்டா 384.
19வது சுற்று: திமுக 28,558, அதிமுக 16,777, அமமுக 3,281, நாதக 1,921, மநீம 980, நோட்டா 444.
20 வது சுற்று: திமுக 24,711: அதிமுக 14,761, அமமுக 2,676, நாதக 1,541, மநீம 816, நோட்டா 355.
21வது சுற்று: திமுக 17,066, அதிமுக 10,328, அமமுக 1,644, நாதக 1,302, மநீம 596, நோட்டா 231.

22வது சுற்று: திமுக 5,95,845, அதிமுக 3,37,448, அமமுக 68,928, நாதக 40,929, மநீம 16,954, நோட்டா 8191.தபால் வாக்குகள் சேர்க்கப் பட்டவை: திமுக 5,99,292, அதிமுக3,37,978, அமமுக 69,030, நாதக 41,056, மநீம 17,005. திமுக வேட்பாளர் 2,61,314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.மயிலாடுதுறை தொகுதியில் 42 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதால் திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
42 ஆண்டுகளுக்குப் பிறகு...மயிலாடுதுறை மக்களவை தேர்தல் வரலாற்றில் 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது. 1971ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்ரவேலு வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த தேர்தலில் 2 முறை திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதிகாரிகள் விசிட்...வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பகுதிகளுக்கு நாகை கலெக்டர் சுரேஷ்குமார் அடிக்கடி சென்று சோதனை நடத்தி வாக்கு எண்ணும் பணியை விரைவுப்படுத்தினார். இதேபோல் நாகை எஸ்பி விஜயகுமார் தொடர்ந்து வாக்கு எண்ணும் பகுதிகளில் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை அடிக்கடி விசிட் செய்து கண்காணித்து வந்தார்.
பேருந்துகள்நிறுத்தம்மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ வி சி கல்லூரியில் நேற்று காலை 8 ம முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி இரவு வரை நீடித்தது. இந்த வாக்கு எண்ணும் பணியை காரணம் காட்டி மயிலாடுதுறையிலிருந்து மன்னம்பந்தல், ஆறுபாதி, வெள்ளநகர், வடகரை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நேற்று காலை 6 மணி முதல் இரவு வரை இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.


Tags : candidate ,DMK ,constituency ,Mayiladuthurai Lok Sabha ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...