×

நீலகிரியில் ஆ.ராசா வெற்றி அவிநாசியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அவிநாசி,மே24:நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா போட்டியிட்டார் இவரை எதிர்த்து அதிமுக சார்பில் தியாகராஜன் போட்டியிட்டார். இதில் திமுக வேட்பாளர் ராசா இரண்டு லட்சத்து 5 ஆயிரத்து 474 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், திமுகவினர் அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் திரண்டு வந்து பட்டாசு வெடித்து, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செல்வரங்கம், ஆர்.சாந்தி, நகர இளைஞரணி  அமைப்பாளர் வசந்தகுமார், நகர துணை செயலாளர் சாந்தி,ரவி, முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன்,செந்தில் மோகனசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் அவிநாசி பழைய பஸ் நிலையம், தாலூகா அலுவலகம், பஸ் ஸ்டாப், சீனிவாசபுரம், கடைவீதி வடக்கு ரத வீதி, முத்துசெட்டிபாளையம், சிந்தாமணி, வள்ளுவர் வீதி, சூளை, மடத்துப்பாளையம் ரோடு, ராயம் பாளைையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Tags : Athira ,Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்