×

கோவை ஸ்டுடியோவில் ரூ.1.65 லட்சம் மோசடி

கோவை, மே 24:கோவை ஸ்டுடியோவில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மோசடி செய்ததாக ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை-திருச்சி ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ செயல்பட்டு வருகிறது. இங்கு திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனிதா, ஜாகீர் உசேன், மரிய அந்தோணி ஆகிய 3 பேர் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக நிறுவன மேலாளர் நவீன் பிரகாஷ்(30) என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி ரேஷ்கோர்ஸ் போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Coimbatore Studio ,
× RELATED கோவை ஸ்டுடியோவில் ரூ.1.65 லட்சம் மோசடி