×

சிறு தொழில்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கோவை, ேம 24: கோவை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 5,70,514 வாக்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்திற்கும் கூடுதலாக வாக்குகள் அளித்து மாபெரும் வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு எங்களின் அணியின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்ற கருத்தோடு தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். மோடியின் மதவாத அரசியல் மற்றும் ஜிஎஸ்டிக்கு எதிராக தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர்.

எதிர்காலத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகளில் அக்கறை செலுத்துவோம். நாங்கள் ஏற்கனவே தெரிவித்தது போல், கோவை சிறு தொழிலை பாதுகாக்க ஜாப் ஆர்டர் ஜிஎஸ்டி ரத்து செய்ய தமிழக எம்.பிகளின் உதவியுடன் முயற்சி எடுப்பேன். சிறு தொழிலை பாதுகாப்பதை முதல் காரியமாக எடுத்துக்கொள்வேன். நொய்யல், கவுசிகா நதி மற்றும் மாவட்டத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க அனைத்து அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவோம். பாஜவின் வெற்றி என்பது மதசார்புடைய அரசை இந்திய மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்பது எங்களை பொறுத்தவரை வருத்தமான காரியமாக பார்கிறோம். பாஜ அரசு கடந்த காலத்தை போல் இல்லாமல் மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தும் அரசாக இருக்க வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் கூறினார்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை