கோவை தொகுதியில் 6 முறை களம் கண்ட பா.ஜ.க., 4வது முறையாக தோல்வி

கோவை, மே 24: கோவை மக்களவை தொகுதியில் 5,558 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. கோவை மக்களவை தொகுதியின் 6 சட்டமன்ற தொகுதி மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதி என 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை கோவை ஜி.சி.டி கல்லூரியில் நேற்று நடந்தது. இதில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்படி, மொத்தம் 5,558 வாக்குகள் பதிவாகியுள்ளது. 317 வாக்குகள் செல்லாதவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) பி.ஆர்.நடராஜன் 3,409 வாக்குகளை பெற்றார். பாஜ சார்பில் களம் இறங்கிய சி.பி. ராதாகிருஷ்ணன் 1,184 வாக்குகளை பெற்று 2ம் இடம் பிடித்தார்.

தபால் ஓட்டு விவரம்:

வேட்பாளர் பெயர் --------------------வாக்கு எண்ணிக்கை

சி.பி.ராதாகிருஷ்ணன்-------------------1,184

பி.கோவிந்தன்------------------------------18

பி.ஆர்.நடராஜன் ------------------------------3409

கல்யாணசுந்தரம் ----------------------------128

மகேந்திரன் -------------------------------296

பி.மணிகண்டன் ---------------------------5

அப்பாதுரை ----------------------------------72

கனகசபாபதி-----------------------------------1

கிருஷ்ணன்-------------------------------------1

தனபால் -------------------------------------5

ஏ.நடராஜன் -------------------------------6

புஷ்பநாதன் -------------------------------1

யு.ராதாகிருஷ்ணன் ---------------------3

பி.ராதாகிருஷ்ணன் -------------------3

நோட்டா -------------------------------109

செல்லாதவை(44+273)-----------------317

======================================

மொத்தம்------------------------------5,558.

Related Stories: