ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2வது சுற்றில் வாக்குபதிவு இயந்திரம் பழுது

ஈரோடு, மே 24: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி 16ல் பதிவாகி இருந்த மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் பழுதடைந்ததையடுத்து விவிபேட் மூலம் எண்ணப்பட்டது. ஈரோடு மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐஆர்டிடி., கல்லூரியில் நேற்று நடந்தது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில், இரண்டாவது சுற்றில் வாக்குசாவடி 16ல் மாநகராட்சி 5வது வார்டுக்குட்பட்ட பூம்புகார், பனங்குட்டை, எம்ஜிஆர்., நகர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 769 வாக்குகள் பதிவாகி இருந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பழுதடைந்ததையடுத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், 16வது வாக்குசாவடியில் வைக்கப்பட்டிருந்த விவி.பேட் இயந்திரம் எடுத்து வரப்பட்டு அதில் பதிவான சீட்டுகளை கொண்டு வந்து வாக்குகள் எண்ணப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: