ஆட்டோ திருடிய 2 பேர் கைது

ஈரோடு, மே 24: ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம்காலனி தேவா வீதியை சேர்ந்தவர் முருகானந்தம்(45). இவர் சொந்தமாக மினி டோர் ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு வாடகை முடிந்து அவரது மினி டோரை வீட்டிற்கு அருகில் நிறுத்தி சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதேபோல் ஈரோடு கொல்லம்பாளையம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் அவருக்கு சொந்தமான மினிடோர் ஆட்டோவை நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றபோது, மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று நாடார் மேடு பகுதியில் சூரம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக இரண்டு மினிடோர் அடுத்தடுத்து வந்தது. ஆட்டோவை நிறுத்தி, டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  இதில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சிவன்மலை பகுதியை சேர்ந்த இளங்கோவன் (44), மற்றொருவர் திருப்பூர் மாவட்டம் சிவன்மலை காட்டூர் பகுதியை சேர்ந்த சந்துரு (36) என தெரியவந்தது. மினிடோர் ஆட்டோக்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Related Stories: