மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதி திமுக., வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

ஊட்டி மே 24:  நீலகிரி தொகுதியில் 2வது முறையாக திமுக., வேட்பாளர் ஆ.ராசா எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். நீலகிரி தொகுதிக்குட்பட்ட குன்னூர், கூடலூர், ஊட்டி, அவிநாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஊட்டி அருகேயுள்ள காக்காதோப்பு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. நேற்று, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

Advertising
Advertising

24 சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதன் முடிவில், திமுக., வேட்பாளர் ராசா 5 லட்சத்து 47 ஆயிரத்து 832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக அதிமுக., வேட்பாளர் தியாகராஜன் 3 லட்சத்து 42 ஆயிரத்து 9 வாக்கு பெற்றார். அதிமுக., வேட்பாளரை காட்டிலும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 823 வாக்கு அதிகம் பெற்று ராசா வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன் 41169 வாக்கு பெற்று 3வது இடத்தை பெற்றார். 40 ஆயிரத்து 419 வாக்கு பெற்று அமமுக., வேட்பாளர் ராமசாமி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

 

இதற்கு அடுத்தப்படியாக நோட்டோ 18 ஆயிரத்து 149 வாக்குகள் பெற்றிருந்தது. அசோக்குமார் (சுயே) 4088 வாக்குள் பெற்றிருந்தார். ஆறுமுகம் (சுயே) 1621 வாக்குகள் பெற்றிருந்தார். சுப்பிரமணி (சுயே) 5229 வாக்குள் பெற்றிருந்தார். நாகராஜ் (2199) வாக்குகள் பெற்றிருந்தார். ராஜரத்தினம் (சுயே) 4747 வாக்குகள் பெற்றார். கே.ராஜா (சுயே) 3257 வாக்குகள் பெற்றார்.

நீலகிரி தொகுதியில் மொத்தம் 3275 தபால் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. இதில், அதிகபட்சமாக திமுக., வேட்பாளர் ராசாவிற்குகு 2396 வாக்குகள் பதிவாகியிருந்தன. 330 ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள். நீலகிரி தொகுதியில் திமுக., வேட்பாளர் ராசா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை இரவு 7 மணிக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

Related Stories: