புஞ்சை புளியம்பட்டி அருகே கார் மீது பஸ் மோதல் தந்தை, மகன் சாவு

சத்தியமங்கலம், மே 24: புஞ்சை புளியம்பட்டி அருகே கோவை சாலையில் அரசு பஸ்சும் காரும் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
Advertising
Advertising

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் அனீஸ்(48) இவருக்கு ஆதர்ஸ்(22), ஆகாஸ்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆதர்ஸ் கேரளாவில் வசித்து வருகிறார். ஆகாஸ் துபாயில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் விடுமுறை காரணமாக துபாயில் இருந்து ஆகாஸ் விமானம் மூலம் நேற்று அதிகாலை பெங்களூரு விமானம் நிலையம் வந்துள்ளார்.

கேரளாவில் இருந்து காரில் சென்ற தந்தை அனீஸ், மூத்த மகன் ஆதர்ஸ் ஆகியோர் பெங்களூவில் இருந்து ஆகாஸை ஏற்றிக் கொண்டு கேரளா மாநிலம் பாலக்காடு செல்ல சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். காரை ஆதர்ஸ் ஓட்டி வந்துள்ளார். முன்பக்க சீட்டில் ஆகாசும் பின்பக்க சீட்டில் தந்தை அனீசும் இருந்தனர். சத்தியமங்கலம் அடுத்த புங்கம்பள்ளி குளம் அருகே கார் சென்றபோது, கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துமனையில் சேர்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அனீஸ், ஆதர்ஸ் உயிழந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணி செங்குட்டுவன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயம்பட்ட ஆகாஷ், செங்குட்டுவன் இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: