×

அரவக்குறிச்சி சட்டமன்றதொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி: சுற்று வாரியாக வாக்குகள் விவரம்

கரூர், மே 24:  அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் உள்பட 63வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி  அதிமுக வேட்பாளரை விட 37,939 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில்சுற்று வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:முதல்சுற்று:திமுக: 5102அதிமுக:3911 .2வது சுற்று:திமுக: 5285,அதிமுக:4108,3வதுசுற்று:திமுக:5945 அதிமுக3801, 4வதுசுற்று: திமுக:5564அதிமுக 3269 5வதுசுற்றுதிமுக 6186,அதிமுக4108.6வதுசுற்று:திமுக 5591.அதிமுக3788 7வதுசுற்று-திமுக 3505அதிமுக4857.8வது சுற்று திமுக 4869,அதிமுக3869.9வது சுற்று திமுக 5543, அதிமுக 3765 10வது சுற்று திமுக 4854,அதிமுக3350. 11வது சுற்று:திமுக 4854,அதிமுக 3550. 12வது சுற்று: திமுக 4079,அதிமுக 3558.13வது சுற்று:திமுக 5975 அதிமுக 3573.14வது சுற்று: திமுக 5046,அதிமுக2953.15வது சுற்று:திமுக 7167,அதிமுக 815.16வது சுற்று:திமுக 6140,அதிமுக 571. 17வது சுற்று: திமுக 5135,அதிமுக 3538. 18 வது சுற்று: திமுக6445, அதிமுக 3545.

மொத்த வாக்குகள்-2,05273  பதிவானவை- 1,73.115 செந்தில்பாலாஜி திமுக - 97,737 செந்தில்நாதன் அதிமுக  59,798 வாக்கு வித்தியாசம்: 37,939தபால் வாக்குகள் விபரம் மொத்தம்  168செல்லாத ஓட்டு 8 செல்லுபடியானவை 160திமுக 82, அதிமுக &72 , நாம்தமிழர்3, மக்கள்நீதிமய்யம் 2 சுயே 1.வாக்கு எண்ணிக்கை அறிவிப்பு திடீர் நிறுத்தம்அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதலே திமுக வேட்பாளர்செந்தில்பாலாஜி முன்னிலை பெற்றுவந்தார், எனினும் பள்ளபட்டி ஓட்டு எண்ணியபோது அவர் 15வது ரவுண்டில் 7167ஓட்டுபெற்றார். அதிமுக வெறும்  815 ஓட்டுக்கள்பெற்றது. 16வது ரவுண்டில் அவர் 6140 வாக்குகள்பெற்ற நிலையில் அதிமுக வெறும் 571 ஓட்டுக்கள் பெற்றது. இதனால் அங்கிருந்த திமுக,அதிமுக முகவர்கள்இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர், இதுபற்றி அறிந்த கலெக்டர் அன்பழகன் அங்கு வந்து அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். உங்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது என்றார். பின்னர் முடிவு அறிவிப்பதை நிறுத்துமாறு தொகுதி தேர்தல் அலுவலர் மீனாட்சியிடம் கூறினார்.எஸ்பி விக்ரமன் வந்து போலீசாரை உள்ளே வரும்படி செய்யவேண்டாம் என்றார். இதனையடுத்து அமைதி ஏற்பட்டது. அதன்பின்னர் நிறுத்தப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள்  அறிவிக்கப்பட்டன, அடுத்தடுத்த சுற்றையும் அறிவிப்பதில் தாமதத்தை கடைபிடித்தனர்.




Tags : Senthilpalaji ,Aravakurichi Assembly ,DMK ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்